සිංහල English
 
+94812388261

neo

நோய்கள் அல்லது காயங்களுக்கு சிகிச்சையளிக்க மஸாஜ் செய்தல், வெப்ப சிகிச்சை மற்றும் உடற்பயிற்சி செய்தல் போன்ற இயற்பியல் மருத்துவ முறைகளை கையாளும் பிரிவே இயன்மருத்துவப் பிரிவாகும்.

இயற்பியல் மருத்துவப்பிரிவு (DPM) 1980 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது பேராதனை போதனா வைத்தியசாலையின் ஆரம்பகாலத்தில் நிறுவப்பட்ட பிரிவுகளில் ஒன்றாகும். ஒரு இயன்மருத்துவ தொழிநுட்பவியலாளர் மற்றும் மிகக்குறைந்த உபகரணங்களுடன் இப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டது.
தற்போது எம்மிடம் திறமையும் அனுபவமுமிக்க 8 இயன்மருத்துவ தொழிநுட்பவியலாளர்கள் உள்ளனர். எம்மிடம் நவீன சிகிச்சைமுறை உபகரணங்கள் உள்ளன. எமது வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு சிறப்பும் மதிப்பும் மிக்கதாக உள்ளது.

இயன்மருத்துவ சேவை தனிப்பட்ட மதிப்பீடு, சிகிச்சையளித்தல் மற்றும் பரந்துபட்ட சிகிச்சை தலையீடுகளை உள்ளடக்கியுள்ளது. நாம் நரம்பியல், மூட்டுவாதவியல், என்புநோயியல், குழந்தைநலம், விளையாட்டு மருத்துவம் போன்ற அனைத்து பிரிவுகளிலும் சேவை வழங்குவதில் நிபுணத்துவம் பெற்றுள்ளோம்.

எமது சேவைகள்:

மின்னாற்றல் சிகிச்சை முறைமை,

  • தசை மற்றும் தசை நாண்கள் கிழிதல், சுளுக்கு போன்றவற்றிற்கு கழியொலி சிகிச்சை வழங்குதல்.
  • வன்கூட்டுத்தசை பாதிப்பு நிலைமைகள் மற்றும் அழற்சி நிலைமைகள் போன்றவற்றிற்கு சிற்றலைச் சிகிச்சை வழங்குதல்.
  • கை மற்றும் கால்களுக்கு மெழுகுக்குளியல்.
  • பரபரிவு நரம்பு பாதிப்புகள் மற்றும் வீக்க நிலைமைகள் போன்றவற்றிற்கு மின்தூண்டல் (பெரடிக், கல்வனிக், IDC) சிகிச்சை வழங்குதல்.
  • தசையினூடான மின் நரம்பு தூண்டல் (TENS) மற்றும் வலி நிவாரண சிகிச்சை வழங்குதல்.

பொறிமுறை சிகிச்சை முறைமை,

  • தட்டுவிலகல் மற்றும் ஸ்பொண்டிலொலிஸ்டசிஸ் போன்ற முண்ணாண் கோளாறுகளுக்கு பொறிமுறை இழுவை சிகிச்சை வழங்குதல்.
  • தீக்காயங்கள், நரம்பியல் நிலைமைகள், மற்றும் தெரிவு செய்யப்பட்ட என்புநோய்களுக்கு (முன்புற மூட்டுநார்த்தசை மறுசீரமைத்தல்) தொடர்ச்சியான இயக்கமற்ற அசைவு (CPM உபகணத்தை பயன்படுத்தி) சிகிச்சை வழங்குதல். இலங்கையில் CPM உபகரண வசதி கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் பேராதனை போதனா வைத்தியசாலையிலும் மாத்திரமே உள்ளது.

உடற்பயிற்சி நிகழ்ச்சிகள்,

  • தொங்கவிடல் சிகிச்சை.
  • சிகிச்சை உடற்பயிற்சிகள் (வலுவூட்டல், நீட்டுதல், இயக்கமின்றிய அசைவு).
  • மூட்டு இணைத்தல் மற்றும் அசைவற்ற இயக்கம்.
  • மெல்லிழைய பாதிப்புகளுக்கான உடற்பயிற்சிகள்.
  • அசைவு சீராக்கல் மற்றும் நடை சீராக்கல் உடற்பயிற்சிகள்.

நோயாளர்களுக்கான அறிவுறுத்தல்கள்:

  • நோயாளிகள் இயன்மருத்துவ சேவையை பெறுவதற்கு வைத்தியசாலை கிளினிக், வெளிநோயாளர் பிரிவு அல்லது வாட்டு வைத்தியரின் பரிந்துரைக் கடிதம் அவசியம்.
  • சிறந்த சேவையை பெறுவதற்காக உங்களது மருத்துவ மற்றும் பரிசோதனை அறிக்கைகளை கொண்டுவரவும்.
  • சிகிச்சை பெறுவதற்கு உங்களுக்கென நேரத்தை முன்கூட்டியே ஒதுக்கிக்கொள்வதும், அத்தினத்தில் உரிய நேரத்தில் சமூகம் தருவதும் கட்டாயமாகும்.
  • இப்பிரிவின் வேலை நேரங்கள் கீழ்வருமாறு,
நோயாளர் வகை நாள் நேரம்
வெளிநோயாளர் திங்கள் முதல் வெள்ளி வரை மு.ப. 8.00 – பி.ப. 4.00
சனிக்கிழமை மு.ப. 8.00 – பி.ப. 12.00
உள்ளக நோயாளர்கள் பொது விடுமுறை தினங்கள் உட்பட திங்கள் முதல் ஞாயிறு வரை

 

© 2012 Welcare Wordpress Premium Theme by WPnukes, all rights reserved.
go to top
Web Design MymensinghPremium WordPress ThemesWeb Development

Another Recent Event

January 6, 2014January 6, 2014
This is another recent which held at peradeniya teaching hospital on 05th January 2014. Please click on this news item for more details. thanks.

nteger ligula ipsum, imperdiet sed iaculis

January 6, 2014
Quisque imperdiet eu enim id placerat. Integer ligula ipsum, imperdiet sed iaculis at, volutpat quis leo. Quisque imperdiet eu enim id placerat. Integer ligula ipsum, imperdiet sed iaculis at, volutpat quis leo. Quisque imperdiet eu enim id placerat. Integer ligula ipsum, imperdiet sed iaculis at, volutpat quis leo.