நரம்பியல் பிரிவானது மூளை, முண்ணாண், மற்றும் பரபரிவு நரம்புகள் (மூளை மற்றும் முண்ணாணுக்கு வெளியே உள்ள நரம்புகள்) உட்பட நரம்புத்தொகுதியின் நோய்நிலைகளுடன் தொடர்புடைய சிறப்பு மருத்துவப்பிரிவாகும். இங்கு நரம்பியல் தொடர்பான நோய்நிலைகளுள்ளவர்களுக்கு நாம் விசேட சேவையை வழங்குகின்றோம்.
பேராதனை போதனா வைத்தியசாலையின் நரம்பியல் பிரிவானது ஓய்வுபெற்ற மாண்புமிகு பேராசிரியர் நிமல் சேனாநாயக்க அவர்களினால் உருவாக்கப்பட்டது.
நரம்பியல் விசேட வைத்திய நிபுணரின் தலைமையின் கீழ் இயங்கும் நரம்பியல் பிரிவானது பேராதனை போதனா வைத்தியசாலையின் ஆரம்ப வைத்திய பராமரிப்பு பிரிவினால் உள்வாங்கப்பட்ட நரம்பியல் நோயாளிகளையும் (அல்லது ஐயத்துக்குரிய நோயாளிகளையும்), எமது வைத்தியசாலையினதும் பிரதேசத்திலுள்ள ஏனைய வைத்தியசாலைகளினதும் ஏனைய விசேட வைத்திய நிபுணர்களால் பரிந்துரை செய்து அனுப்பப்படும் நோயாளிகளையும், பரிசோதிப்பதுடன் விசேட நரம்பியல் கிளினிக்கிலும் நோயாளிகளை பரிசோதிக்கின்றது.
நாம் (கண்டி போதனா வைத்தியசாலையின் நரம்புவினையியல் விசேட வைத்திய நிபுணரை கலந்தாலோசித்து) மூளையஅலை ஆய்வுகள், நரம்புகள் மற்றும் தசைகளில் பரிசோதனைகள், நரம்பியல் தொழிற்பாடுகள் போன்ற நரம்பு வினையியல் பரிசோதனைகள் உட்பட மற்றும் MRI ஸ்கேன், CT ஸ்கேன், நரம்பியல் நோய்நிலைமைகளை கண்டறிவதற்கான ஏராளமான பரிசோதனை வசதிகளை வழங்குகின்றோம். நாம் நோயாளிகளை நரம்பியல் சத்திரசிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு அனுப்புகிறோம்.
எமது அணி நன்கு பயிற்றப்பட்ட நரம்பியல் விசேட வைத்திய நிபுணரின் தலைமையின் கீழ் இயங்கும் அதேவேளை நாம் வலிப்பு, மல்டிபல் ஸ்கலிரோசிஸ், இயக்கக் கோளாறுகள், பாகின்ஸன் நோய், நரம்பியல்சார் பார்வைக் கோளாறுகள், நாட்பட்ட தலைவலி, நடுக்கம், மூளைக் காயங்கள் மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களுக்கு ஆய்வுகள், சிகிச்சை, உதவிகள் மற்றும் தேவைப்படுமிடத்து புனருத்தாரனம் வழங்கல் உள்ளடங்களாக முழுமையான விசேட வைத்திய சேவையை வழங்குகின்றோம்.
எமது அணி மிக உயர் பராமரிப்பை வழங்குவதுடன் எமது அணைத்து நோயாளிகளுக்கும் மிகப்பொறுத்தமான சிகிச்சையை வழங்குகின்றது.
சேவைகள்:
- வலிப்பு, இயக்கக் கோளாறுகள், மல்டிபல் ஸ்கெலிரோசிஸ், பாகின்ஸன் நோய் மற்றும் பக்கவாதம் போன்ற பொதுவான நரம்பியல் தொடர்பான நோய்களுடைய நோயாளிகளை நிர்வகித்தல்
- ஆரம்பப் பராமரிப்பு பிரிவிற்கு வரும் TIA நோயாளிகளுக்கு விசேட பராமரிப்பை வழங்கல். இந்நோயாளிகள் மிக அவசரமான நோயாளிகளெனின் 48 மணி நேரத்திற்குள்ளாகவும், ஏனையவர்கள் ஒரு வாரத்திற்குள்ளாகவும் நரம்பியல் விசேட வைத்திய நிபுணரினால் பரிசோதிக்கப்படும் அதேவேளை முழுமையான மதிப்பீடொன்றும் மேற்கொள்ளப்படும்.
- பக்கவாத பிரிவு – பக்கவாத நோயாளிகளை மதிப்பீடு செய்தலும் ஆரம்ப புனருத்தாரனம் செய்தலும். பக்கவாத நோயாளிகளை பராமரித்தல் தொடர்பில் பல்துறை பயிற்சிகளை பெற்ற ஒரு அணி இந்நோயாளிகளை பராமரிக்கும்.
- பொது நரம்பியல், தலைவலி, மற்றும் TIA கிளினிக்குகளை நடாத்துதல். தலைவலி கிளினிக்கில் நாம் நாட்பட்ட தலைவலியுடைய நோயாளிகளிக்கு ஒரு முழுமையான மதிப்பீடொன்றையும் சிகிச்சையையும் வழங்குகின்றோம்.
- தீவிரமான பக்கவாத காரணிகளுடையவர்களுக்கு (பக்கவாதத்திற்கான உறைதலுடைப்பு சிகிச்சை) விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நரம்பியல் கிளினிக்குகள்
முதலாம் மாடி(வெளி நோயாளர் பிரிவு கட்டிடம்) – கிளினிக் அறை 1 தொலைபேசி – 0812388001 (Ext) 239 |
|||
---|---|---|---|
பொது நரம்பியல்கிளினிக் | செவ்வாய்க்கிழமை | மு.ப 08.00 – பி.ப 12.00 | வைத்தியர்.செல்வி. அஜினி அரசலிங்கம் |
தலைவலி கிளினிக் | செவ்வாய்க்கிழமை | மு.ப 08.00 – பி.ப 12.00 | |
முதல் மாடி-வாட்டு 12 தொலைபேசி – 0812388001 (Ext) 312 |
|||
டி.ஐ.ஏ. (TIA) கிளினிக் ** | திங்கள் முதல் வெள்ளி வரை | மு.ப 10.00 – பி.ப 12.00 | வைத்தியர்.செல்வி. அஜினி அரசலிங்கம் |
** பாரிசவாதம் மற்றும் திரிநிலை குருதியோட்டக்குறை தாக்கத்திற்கான (TIA) அறிகுறிகலான முகம், கை, மற்றும் கால் பலமிழத்தல், திடீரென்று பேச்சுத் தடுமாறுதல் போன்ற அறிகுறிகலுள்ள நோயாளிகள் பீ.சி.யு. என்றழைக்கப்படும் பூர்வாங்க சிகிச்சை அலகுக்கு இயலுமானவரை விரைவாக வரவும்.அங்கிருந்து விசேட சிகிச்சைக்காக அவர்கள் அனுப்பப்படுவர்.
